×

சர்கார் சர்ச்சை: நள்ளிரவில் ரஜினியின் அதிரடி டுவீட்

சர்கார் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக டுவீட் போட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்து போன அமைச்சர்கள் பலர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளனர். மேலும் பல இடங்களில் அதிமுகவினர் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தியேட்டர் முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை
 
சர்கார் சர்ச்சை: நள்ளிரவில் ரஜினியின் அதிரடி டுவீட்

சர்கார் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக டுவீட் போட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘சர்கார்’  திரைப்படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்து போன அமைச்சர்கள் பலர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் பல இடங்களில் அதிமுகவினர் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தியேட்டர் முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை கிழித்து ரௌடி தனம் பண்ணி வந்தனர். இதனால் படத்தில் இருந்து சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும் என தகவல் வெளியானது.

சர்கார் சர்ச்சை: நள்ளிரவில் ரஜினியின் அதிரடி டுவீட்

இந்நிலையில் நள்ளிரவு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீஸார் சென்றுள்ளனர் என டிவீட் போட்டது. சிறிது நேரத்தில் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் போலீஸ் என் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்கள். என் வீட்டில் யாரும் இல்லாததல் அவர்கள் அங்கிருந்து போயுள்ளனர் என டிவீட் செய்துள்ளார். இதனால் திரைத் துறையே அலறிப்போய் உள்ளது. இது ஒருபுறம் இருக்க இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என காட்டமாக டுவீட் போட்டுள்ளார்.

ரஜினி மெர்சல் பட விவகாரத்திலே விஜய்க்கு ஆதரவாக பேசியது குற்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News