×

கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி: சவாலான கதாப்பாத்திரத்தில் நந்திதா!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்கும் சவாலான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர்ந்து நடித்து வரும் நந்திதாவுக்கு சமீபத்தில் அசுரகுலம் படம் வெளியானது. இந்நிலையில் தற்போது நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பள்ளி மாணவியாக வரும் நந்தித்தா கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிறார். பள்ளி
 
கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி: சவாலான கதாப்பாத்திரத்தில் நந்திதா!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்கும் சவாலான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர்ந்து நடித்து வரும் நந்திதாவுக்கு சமீபத்தில் அசுரகுலம் படம் வெளியானது. இந்நிலையில் தற்போது நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பள்ளி மாணவியாக வரும் நந்தித்தா கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிறார். பள்ளி மாணவி, கர்ப்பிணி, குழந்தைக்கு தாய் என மூன்றுவிதமான தோற்றத்தில் சவாலான வேடத்தில் நடிக்க உள்ளார் நந்திதா ஸ்வேதா. இந்த படம் நந்திதாவுக்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி கொடுக்கும். மேலும் விஜய் வசந்த் முக்கிய வேடத்தில் இதில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இந்த படத்தை இயக்குகிரார்.

From around the web

Trending Videos

Tamilnadu News