×

ஷங்கரிடம் “நீ எனக்கு சான்ஸ் கேக்குறியா?” – ரோகிணியை திட்டிய இளையராஜா!

Ilaiyaraja, Rohini, Shankar : 1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும், 5-முறை தேசிய விருதுகளை பெற்று, திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் ‘இசைஞானி’ திரு.இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ‘இசையராஜா-75’ என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக சமீபத்தில் நடத்தியது. இவ்விழா நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. விழாவின்
 
ஷங்கரிடம் “நீ எனக்கு சான்ஸ் கேக்குறியா?” – ரோகிணியை திட்டிய இளையராஜா!

Ilaiyaraja, Rohini, Shankar : 1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும், 5-முறை தேசிய விருதுகளை பெற்று, திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் ‘இசைஞானி’ திரு.இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ‘இசையராஜா-75’ என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக சமீபத்தில் நடத்தியது.

இவ்விழா நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. விழாவின் ஒரு பகுதியில் இளையராஜா, இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் ஸ்டேஜில் இருக்கும்போது, விழாவை தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணி ஷங்கரிடம் “Actually உங்க ரெண்டு பேருடைய காம்பினேஷனையும் பாக்கணும்னு நிறைய பேருக்கு ஆவலா இருந்திருக்கும்” என்று பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்ட இளையராஜா “இப்படிலாம் கேட்க கூடாதுமா.. நீ எனக்கு சான்ஸ் கேக்குறியா?” என்று கேட்டார்.

அதற்கு ரோகிணி “அப்படிலாம் இல்ல சார்” என்று கூறினார். பின், இளையராஜா “I don’t like this. இப்ப ஏன் அந்த மேட்டர எடுக்குற நீ? அவருக்கு comfortable-ஆ இருக்க கூடிய ஆட்களை வச்சுக்கிட்டு அவரு வேலை பாத்துகிட்டு இருக்காரு. அவரைப் போய் ஏன் disturb பண்ற” என்று தெரிவித்தார். மேடையில் இளையராஜா இப்படி பேசியது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News