×

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி சிம்பு வழக்கு: விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கக்கோரி நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிம்பு நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். மைக்கேல் ராயப்பன் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம. ஆனால் படம் தோல்வி அடைந்ததால், 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி சிம்பு வழக்கு: விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கக்கோரி நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிம்பு நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். மைக்கேல் ராயப்பன் தயாரித்து இருந்தார்.

இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம. ஆனால் படம் தோல்வி அடைந்ததால், 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிம்பு, மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனரா. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தன் மீது அவதூறு பரப்பியதாக கூறிய நடிகர் சிம்பு, ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கக்கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தயாரிப்பாளர் கைக்கேல் ராயப்பன் ஆகியோர் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News