அடித்து கிளப்பும் நேர்கொண்ட பார்வை – 5 நாள் வசூல் தெரியுமா?

Nerkonda paarvai collection update – அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூல் ரீதியாக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இந்திய முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே இப்படம் சென்னையில் மட்டும் ரூ.1.58 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ.29 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. எனவே, விஸ்வாசத்தை தொடர்ந்து முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்பட வரிசையில் நேர்கொண்ட பார்வை 2வது இடத்தை பிடித்துள்ளது.
அதைத் தொடந்து வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் வந்ததால் இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ.5.55 கோடியை வசூல் செய்துள்ளது. மேலும், நேற்று பக்ரீத் விடுமுறை என்பதால் பெருமளவில் தியேட்டர்களில் முன்பதிவு மற்றும் கூட்டங்களை பார்க்க முடிந்தது. நேற்று மட்டும் சென்னையில் ரூ. 1.15 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் படம் வெளியாகி 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் நேர்கொண்ட பார்வை ரூ. 6.70 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
#Thala #Ajith‘s #NerKondaPaarvai #NKP in Chennai city –
₹ 1.15 Cr on Monday..Since release, the movie is grossing ₹ 1 Cr+ every day..
5-days grand total #Chennai gross is ₹ 6.70 Crs..
Racing towards the ₹ 10 Cr Gross Mark..
— Ramesh Bala (@rameshlaus) August 13, 2019