×

இனி அக்கட தேசம் தான்: விரக்கதியில் பிரபல தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா என்ற தெலுங்கு படத்தின பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் தமிழ் திரையுலகில் நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வரைமுறை படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் தெலுங்கு பக்கம் தான் செல்லும் நிலைமை ஏற்படும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் நடிக்கும் என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா என்ற தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று
 
இனி அக்கட தேசம் தான்: விரக்கதியில் பிரபல தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா என்ற தெலுங்கு படத்தின பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் தமிழ் திரையுலகில் நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வரைமுறை படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் தெலுங்கு பக்கம் தான் செல்லும் நிலைமை ஏற்படும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜூன் நடிக்கும் என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா என்ற தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது, தமிழ் சினிமாவில் நடிகா்களின் சம்பம் வரைமுறைபடுத்த படவேண்டும். தமிழ் நடிகா்களின் சம்பளம் தான் என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு பெரும் சவலாக இருக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் தெலுங்கில் நடிகா்கள் 10 கோடி அல்லது 15 கோடி சம்பளம் தான் வாங்குகிறார்கள். அதனால் படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்க முடிகிறது. ஆனால் இங்குள்ள நடிகா்களோ 100 கோடி பட்ஜெட் படம் என்றால் 50 கோடியை அவா்களே சம்பளமாக கேட்கிறார்கள். தெலுங்கு திரைப்பட உலகில் தான் நடிகரும், தயாரிப்பாளர்களுக்கும் சரியான பாதையில் பயணிக்கிறார்கள். அவா்களுக்குள் ஒரு ஒத்துழைப்பு இருக்கிறது. அதுபோல தெலுங்கு நடிகர்கள் முன்பணமாக 50 லட்சம் கொடுத்தால் போதும். ஆனால் இங்கு முன் பணமாக 10கோடி கேட்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் கஷ்டமாக இருக்கிறது.

இனி அக்கட தேசம் தான்: விரக்கதியில் பிரபல தயாரிப்பாளர்

தெலுங்கு சினிமாவைப் போன்று தமிழ் சினிமாவிலும் உருவாக வேண்டும். தமிழ் சினிமாவில் நடிகா்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதை நடிகா் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சரி செய்ய வேண்டும் என்று நம்புகிறேன். இந்த நிலை மாறவில்லை என்றால் இன்னும் ஒரு வருடத்திற்குள் தெலுங்கு படங்கள் தயாரிக்க அங்கு சென்று விடுவேன். என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். படத்தை லாபத்தில் தயாரிக்க தான் விரும்புவார்கள். தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே அலுவலகம் வாங்கி விட்டேன்.ஐதராபாத்திற்கு சென்று படங்கள் தயாரிக்கத் தொடங்கி விடுவேன் என்று புலம்புகிறார் ஞானவேல் ராஜா.

From around the web

Trending Videos

Tamilnadu News