×

யானை மேல் இருந்து கீழே விழுந்த நடிகர் ஆரவ்….

நடிகர் ஆரவ் ஒரு படப்பிடிப்பில் யானை மேல் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஆரவ். ஓவியா அவரை காதலித்ததால் அவரும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, ராஜா பீமா படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார். சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ராஜ பீமா காடு சம்பந்தப்பட்ட
 
யானை மேல் இருந்து கீழே விழுந்த நடிகர் ஆரவ்….

நடிகர் ஆரவ் ஒரு படப்பிடிப்பில் யானை மேல் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஆரவ். ஓவியா அவரை காதலித்ததால் அவரும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, ராஜா பீமா படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார். சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

ராஜ பீமா காடு சம்பந்தப்பட்ட படம் என்பதால் கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு யானை பிரதான வேடத்தில் நடிக்கிறது. அதன்படி யானை மீது ஆரவ் அமர்ந்திருப்பது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஆரவ் யானையிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் ஆரவ் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News