×

இனி கடவுள் மறுப்புக் கொள்கை இல்லை – வைகோ திடீர் முடிவு !

பெரியாரின் பிறந்தநாளன்று பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான வைகோ இனிக் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் இருந்து பின் வாங்குவது போல பேசியுள்ளார். பெரியார் என்று சொன்னவுடன் முதலில் ஞாபகத்துக்கு வருவதாக அவரது கடவுள் மறுப்புக் கொள்கை இருந்து வருகிறது. ஆனால் அவர் எதற்காக கடவுள் மறுப்பை முன்வைத்தார் என்ற கேள்விக்குள் யாரும் செல்வது கிடையாது. ஒருவனைத் தாழ்த்தப்பட்டவனாகவும் ஒருவனை உயர்ந்தவனாகவும் சொல்லும் இந்த இந்து வர்ணாசிரம முறைக்கு கடவுள்தான் ஆதாரமாக இருக்கிறார் என்பதால் நான் கடவுளை மறுக்கிறேன்
 
இனி கடவுள் மறுப்புக் கொள்கை இல்லை – வைகோ திடீர் முடிவு !

பெரியாரின் பிறந்தநாளன்று பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான வைகோ இனிக் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் இருந்து பின் வாங்குவது போல பேசியுள்ளார்.

பெரியார் என்று சொன்னவுடன் முதலில் ஞாபகத்துக்கு வருவதாக அவரது கடவுள் மறுப்புக் கொள்கை இருந்து வருகிறது. ஆனால் அவர் எதற்காக கடவுள் மறுப்பை முன்வைத்தார் என்ற கேள்விக்குள் யாரும் செல்வது கிடையாது. ஒருவனைத் தாழ்த்தப்பட்டவனாகவும் ஒருவனை உயர்ந்தவனாகவும் சொல்லும் இந்த இந்து வர்ணாசிரம முறைக்கு கடவுள்தான் ஆதாரமாக இருக்கிறார் என்பதால் நான் கடவுளை மறுக்கிறேன் எனப் பெரியார் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாகப் பேசிவந்த வைகோ இப்போது அந்த கொள்கைகளில் இருந்து பின் வாங்கியுள்ளார். சமீபத்தில் அவர் ‘மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிற்பங்களைக் கண்டு ரசித்தேன், கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு சென்றும் சிற்பங்களைக் கண்டு ரசித்தேன், அதேபோல் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு சென்றும் சிற்பங்களை ரசித்தேன். சிதம்பரத்துக்கு இதுவரை நான் சொல்லவில்லை ஆனால் விரைவில் செல்வேன். நம்முடைய பொக்கிஷங்கள் நம்முடைய கோவில்கள். அந்த கோவில்களுக்கு எல்லோரும் செல்ல வேண்டும். நான் மசூதிக்கு செல்பவர்களையும் வாழ்த்துகிறேன், ஜெபம் கூடங்களுக்கு செல்பவர்களையும் வாழ்த்துகிறேன், அதேபோல் கோவில்களுக்கு செல்பவர்களையும் வாழ்த்துகிறேன். திராவிட கொள்கைகளில் இருந்து மாறி விட்டாயா? அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து விட்டாயா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். ஆனால் ஒன்றை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாற்பதுகளிலும், ஐம்பதுகளும் கொண்டிருந்த கொள்கையில் இருந்து அறிஞர் அண்ணா அறுபதுகளில் இல்லை. எனவே காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்கொள்வதே போர்த்தந்திரம். ஜனாதிக சக்திகளை எதிர்க்க வேண்டும் என்றால் போர்த்தந்திரங்களை மாற்ற வேண்டும் என்று வைகோ பேசினார்.’ எனப் பேசியுள்ளார். வைகோவின் இந்த முடிவுக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News