×

சுபஸ்ரீ வழக்கில் தலைமறைவான அதிமுக கவுன்சிலர் கைது! அதிரடி காட்டிய காவல்துறை!

பேனர் விழுந்து அதனால் லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். பேனர் கொலை சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயதான இளம்பெண் சென்றுகொண்டிருந்தார் அந்த சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்லத் திருமண விழா வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர் மோதி சுபஸ்ரீ கீழே விழா பின் வந்த லாரி அவர்
 
சுபஸ்ரீ வழக்கில் தலைமறைவான அதிமுக கவுன்சிலர் கைது! அதிரடி காட்டிய காவல்துறை!

பேனர் விழுந்து அதனால் லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேனர் கொலை

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயதான இளம்பெண் சென்றுகொண்டிருந்தார் அந்த சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்லத் திருமண விழா வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர் மோதி சுபஸ்ரீ கீழே விழா பின் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்தார்.

தலைமறைவு

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனக்கு நெஞ்சுவலி என்று ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, அவர் தலைமறைவானார்.

அதிரடி கைது

இதுதொடர்பான வழக்கில், ஜெயகோபாலை கைது செய்ய தாமதம் ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் ஏன் ஜெயபால் கைது செய்யப்படவில்லை என பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரியில் ஜெயகோபாலை இன்று கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News