×

அசுரன் படத்தில் விஜய் சேதுபதி – ரசிகர்கள் கொண்டாட்டம்

Vijay sethupathi in Asuran – தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன். இப்படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார். இப்படம் எழுத்தாளர் பொன்மனி எழுதிய வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், யோகி பாபு
 
அசுரன் படத்தில் விஜய் சேதுபதி – ரசிகர்கள் கொண்டாட்டம்

Vijay sethupathi in Asuran – தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன். இப்படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார். இப்படம் எழுத்தாளர் பொன்மனி எழுதிய வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

அசுரன் படத்தில் விஜய் சேதுபதி – ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதை சமீபத்தில் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்திலேயே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. வட சென்னை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கமால் போனது குறிப்பிடத்தக்கது.

தற்போது அசுரனில் விஜய் சேதுபதி நடிப்பது சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News