×

அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்!

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எடுத்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கையால் திட்டமிட்டபடி அஜித், விஜய் படங்கள் உள்பட மற்ற படங்களும் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் விஷால் ஒருசில கோரிக்கைகளை வெளியிட்டு அதனை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும்,
 
அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்!

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எடுத்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கையால் திட்டமிட்டபடி அஜித், விஜய் படங்கள் உள்பட மற்ற படங்களும் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் விஷால் ஒருசில கோரிக்கைகளை வெளியிட்டு அதனை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் ஜூன் 1 முதல் அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இப்போதைக்கு விஷாலின் கோரிக்கைகளை படித்து பார்க்க கூட நேரமில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால் ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் செய்ய  முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தம் மாதக்கணக்கில் இழுத்தால் ஒருபக்கம் தினக்கூலி சினிமா தொழிலாளிகள் கஷ்டப்படுவார்கள், இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் பாதிக்கப்படும். அவற்றில் அஜித், விஜய் படங்களும் அடங்கும். ஆனாலும் இந்த வேலைநிறுத்தத்தால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News