×

இன்னும் பேரே வைக்கல … அதுக்குள்ள கல்லா கட்டும் தயாரிப்பாளர் ? – கலக்கும் தளபதி 63 !

விஜய நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் வியாபாரத்தை இப்போதே தொடங்கிவிட்டது தயாரிப்பு நிறுவனம். விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் பெயர் மற்றும் முதல் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விட்டது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கிட்டதட்ட 50 கோடி ரூபாய்க்கு சன் டீவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை விஜய் படத்திற்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்
 
இன்னும் பேரே வைக்கல … அதுக்குள்ள கல்லா கட்டும் தயாரிப்பாளர் ? – கலக்கும் தளபதி 63 !

விஜய நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் வியாபாரத்தை இப்போதே தொடங்கிவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் பெயர் மற்றும் முதல் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விட்டது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கிட்டதட்ட 50 கோடி ரூபாய்க்கு சன் டீவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை விஜய் படத்திற்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடி திரையரங்க உரிமைகளையும் கிட்டதட்ட 75 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்குப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆடியோ உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமைகளையும் விற்பதற்கான முயற்சிகளும் மும்முரமாக ஆரம்பமாகியுள்ளனர்.

இந்த விற்பனைகளின் மூலமே இப்போதே தளபதி63 படத்தின் பட்ஜெட்டை விட அதிக லாபம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News