×

படம் ஓடலனா தற்கொலை செய்து கொள்வீர்களா? – பா. ரஞ்சித்தை சீண்டிய காயத்ரி ரகுராம்

Gayathri Raghuram – நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதில் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ரஞ்சித் ‘நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு
 
படம் ஓடலனா தற்கொலை செய்து கொள்வீர்களா? – பா. ரஞ்சித்தை சீண்டிய காயத்ரி ரகுராம்

Gayathri Raghuram – நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம் ஓடலனா தற்கொலை செய்து கொள்வீர்களா? – பா. ரஞ்சித்தை சீண்டிய காயத்ரி ரகுராம்

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ரஞ்சித் ‘நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் ‘ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்வீர்களா? அல்லது அடுத்த படத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பீர்களா? அல்லது திரைப்படங்களையே தடை செய்ய வேண்டும் என நினைப்பீர்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிறகென்ன நெட்டிசன்கள் வழக்கம் போல் கஸ்தூரி ரகுராமை கழுவி ஊற்றி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News