×

‘விவேகம்’ வியாபாரத்தை முந்தியது ‘தளபதி 61’

அஜித், விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களும் தங்களுக்குள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதி வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இருவரது படங்களும் நட்பையும் தாண்டி வியாபாரத்தில் போட்டி போடுவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ‘விவேகம்’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை கோல்ட்மைன் டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனம் ரூ.7.2 கோடிக்கு பெற்றது. இந்த தொகையே ரஜினி படத்தை அடுத்து கிடைத்துள்ள மிகப்பெரிய
 
‘விவேகம்’ வியாபாரத்தை முந்தியது ‘தளபதி 61’

அஜித், விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களும் தங்களுக்குள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதி வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இருவரது படங்களும் நட்பையும் தாண்டி வியாபாரத்தில் போட்டி போடுவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ‘விவேகம்’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை கோல்ட்மைன் டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனம் ரூ.7.2 கோடிக்கு பெற்றது. இந்த தொகையே ரஜினி படத்தை அடுத்து கிடைத்துள்ள மிகப்பெரிய தொகை என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்று இளையதளபதியின் ‘விஜய் 61’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை இதே கோல்ட்மைன் நிறுவனம் ரூ.10.8 கோடிக்கு பெற்றுள்ளது. இந்தி சாட்டிலைட் உரிமையை பொருத்தவரையில் ‘விவேகம்’ படத்தை ‘தளபதி 61’ படம் விஞ்சிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News