×

இப்படி பண்ணிட்டீங்களே மா! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் திருமணம் நேற்று ஜோத்பூரில் நடைபெற்றது. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அவரின் நீண்ட நாள் காதலனும்,அமெரிக்க பாடகருமான நிக் ஜோனாஸ் என்பவரை கிறுஸ்துவ முறைப்படி நேற்று திருமணம் செய்துள்ளார்.இவர்களின் திருமண நிகழ்விற்காக ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு பிரமாண்டமான அரண்மனை முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா சென்ற மாதம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கவேண்டாம்
 
இப்படி பண்ணிட்டீங்களே மா! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் திருமணம் நேற்று ஜோத்பூரில் நடைபெற்றது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அவரின் நீண்ட நாள் காதலனும்,அமெரிக்க பாடகருமான நிக் ஜோனாஸ் என்பவரை கிறுஸ்துவ முறைப்படி நேற்று திருமணம் செய்துள்ளார்.இவர்களின் திருமண நிகழ்விற்காக ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு பிரமாண்டமான அரண்மனை முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா சென்ற மாதம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கவேண்டாம் லட்டு மட்டும் சாப்பிடுங்கள் என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இப்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள், எங்களுக்கு மட்டும் அட்வைஸ் செய்வது, ஆனால் உங்கள் கொண்டாடத்திற்கு வேண்டும் என்றால் பட்டாசு வெடிப்பார்களா? என பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News