கோட் படத்துக்கு களைகட்டப்போகும் வசூல்..! நெகடிவிட்டி வர இதுதான் காரணம்..!

by sankaran v |
Goat
X

Goat

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது நெகடிவிட்டிகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தின் வசூல் எப்போது அதிகரிக்கும்? ஏன் இவ்ளோ நெகடிவிட்டின்னு கேட்டதுக்கு பிரபலம் ஒருவர் இப்படி பதில் சொல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமைக்குள்ள 100 கோடியைத் தாண்ட வாய்ப்பு இருக்கு. சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கு. அரசியலுக்கு வர்றாரு. அதனால சில பல அரசியல் சூழ்ச்சிகளும் இருக்கு. அதை எல்லாத்தையும் கடந்து தான் இந்தப் படம் பிக்கப் ஆகும்.

Also read: கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்

அது மாதிரி நெகடிவிடியான விமர்சனங்கள் ஆரம்பத்துல ஹைப்பை டவுன் பண்ணும். 2 நாள் ரசிகர்கள் ஷோ. அடுத்ததா அடல்ட்ஸ், பேமிலி ஆடியன்ஸ். அப்புறமா ஸ்கூலுக்குப் போறவங்க எல்லாம் உள்ளே வர்றாங்க. அப்போ ஆட்டோமேடிக்கா பிக்கப் ஆகிடும்.

அஜீத்தோட பூவெல்லாம் உன் வாசம் ஆரம்பத்துல பிக்கப் ஆகவே இல்லை. தீனா படம் முதல்ல நல்ல பிக்கப். அதே நேரம் ப்ரண்ட்ஸ் படம் லேட் பிக்கப். வடிவேலு காமெடி ரீச்சானதும் நல்லா பிக்கப் ஆக ஆரம்பிச்சிடுச்சு. விமர்சகர்கள் சைடுலயே இது குடியிருந்த கோயில், ராஜதுரைன்னு சொல்றாங்க. 2கே கிட்ஸ்கள் தான் முதல்ல தியேட்டருக்கு வருவாங்க.

GOAT

GOAT

இவங்க தான் விஜயோட வெறித்தனமான ரசிகர்கள். இவங்ககிட்ட நெகடிவிட்டியை சொன்னா சீக்கிரமா அது வைரலாயிடும். ரஜினி, விஜய் படம்னா ஒரு மாஸ், ஒரு டான்ஸ், ஒரு கிளாஸ் இந்த மூணுக்காகத் தான் வருவோம். அது பக்கா என்டர்டெயின்மெண்ட்டா ஜாலியா சிரிச்சிக்கிட்டே போகணும்கற மாதிரியாத் தான் இருக்கும்.

இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும். அதைப் போய் இது அந்தப் படத்துல இருந்து வந்தது... இந்தப் படத்துல இருந்து வந்ததுன்னு சொல்றதால தான் நெகடிவிட்டி வருது. மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

Next Story