அஜித்தின் அடுத்த படம் ஓடிடியில்!.. படத்தின் பெயர் இதுதானாம்!.. என்னப்பா சொல்றீங்க!…

Published on: August 4, 2023
AK
---Advertisement---

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் விடாமுயற்சி என்றும் இந்த படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கப்போகிறார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனையடுத்து இந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், அஜித்தின் அடுத்து படம் விடாமுயற்சி இல்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும், அவர் அடிக்கடி பைக்கில் நெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி, வைரலாகும். உலகத்தையே பைக்கில் சுற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க- என்னங்கடா மறந்துட்டீங்களா? நான் இருக்கேன் – திடீரென வெடிக்கும் அஜித் விஜய் உச்சக்கட்ட மோதல்

சில தினங்களுக்கு முன்பு கூட அவர் பைக்கில் சுற்றுப்பயண் மேற்கொண்ட புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டிருந்தார். இவர் பைக்கில் சுற்றிய நாடுகளையும், அப்போது நடந்த நிகழ்வுகளையும் வீடியோவாக எடுத்துள்ளனர். அதனை ஒரு டாக்குமென்ட்ரி போல எடிட் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அந்த ஆவணப் படத்தை விரைவில் ஓடிடியில் வெளியிட உள்ளனர் என்றும் அந்த படத்திற்கு World tour on two wheeler அல்லது  World tour on bike என்பதில் ஏதாவது ஒன்றை பெயராக வைக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சச்சின் டென்டுல்கர் இதே போல ஒரு ஆவணப் படத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தார். எனவே, அஜித்தும் விரைவில் அந்த ஆவணப் படத்தை வெளியிடப் போகிறார்.

அதுதான் அஜித்தின் அடுத்த படமாக இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் விடாமுயற்சி பெடம் வெளியாகும். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக ஓரே அடியாக 45 நாட்கள் நடிகர் அஜித் கால் ஷீட் கொடுத்துள்ளார் என்றும் பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ஃபகத் பாசில் நடிப்பை கழுவி ஊற்றிய ரசிகர்கள்… வெறியேத்தி விஸ்வரூபம் எடுத்த ரத்தனவேல்..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.