அடுத்த புஷ்பா நம்ம தனுஷ் தான்.!? ஊ சொல்வாரா ஊஊ சொல்வாரா.?!
தெலுங்கில் ஆர்யா, ஆர்யா-2, 100 % லவ், ரங்கஸ்தலம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் புஷ்பா.
இந்த படத்தை அடுத்து புஷ்பா படத்தின் அடுத்த பாகத்தை முதல் பாகத்தை விட சிறப்பாக இயக்கி வருகிறாராராம். அந்த திரைப்படம் 2023-இல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த படங்களை முடித்த பிறகு இயக்குனர் சுகுமார் எந்த பெரிய ஹீரோவை இயக்க இருக்கிறார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது புதிய தகவலாக நடிகர் தனுஷுக்கு அவர் ஒரு கதையை கூறியுள்ளாராம்.
அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழித் திரைப்படமாக உருவாக உள்ளதாம். தனுஷ் ஓகே சொன்னால் விரைவில் அந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. தனுஷ் ஓகே சொல்வாரா ? புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் முடிந்த பிறகு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.