தனுஷ் டைரக்ஷனில் அடுத்ததாக களமிறங்கும் நடிகர்! அவருக்கு ஜோடி யாருனு தெரிஞ்சா அவ்வளவுதான்
தமிழ் சினிமாவில் பெரிய ஹைப்பை ஏற்படுத்தும் நடிகர்களில் முதன்மையானவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் வரும் 26 ஆம் தேதி ரிலீஸாகும் படம் ராயன். இந்தப் படத்தை தனுஷ்தான் இயக்கி நடித்திருக்கிறார். தனுஷுடன் இணைந்து இந்தப் படத்தில் அபர்ணா முரளி, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். சமீபத்தில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது தனுஷ் பேசிய சில விஷயங்களும் பெரும் பேசு பொருளாக மாறியது. படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குத்தமா? ஏன் நான் எல்லாம் வாங்கக் கூடாதா? என்ற வகையில் ஆதங்கத்துடன் பேசியிருந்தார் தனுஷ்.
இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு செல்லும் படக்குழு இப்போது ஐதராபாத்தில் ப்ரோமோஷனுக்காக சென்றிருக்கின்றனர். அப்போது பிரகாஷ்ராஜ் அங்கு உள்ள பத்திரிக்கையாளர்களிடம் கூறிய விஷயம்தான் இப்போது வைரலாகி வருகின்றது.
அதாவது தனுஷ் அடுத்ததாக பிரகாஷ்ராஜையும் நித்யா மேனனையும் லீடு ரோலாக வைத்து ஒருபடத்தை இயக்க போவதாக பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார். இதை பற்றி தனுஷே இசை வெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜை பார்த்து ‘உங்களை வைத்து அடுத்த படத்தை எடுத்தால் என்ன? என நினைக்க தோன்றியது’ என நேராக கூறியிருந்தார்.
ஆனால் அது சும்மா சொன்னார் என்று பார்த்தால் தெலுங்கு ஈவண்டில் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் இதை பற்றி கூறியது மேலும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே பிரகாஷ்ராஜுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். நித்யாமேனனுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.