
Cinema News
இனிமே இவங்கதான் லேடி சூப்பர் ஸ்டார்.. தமன்னாவை கொண்டாடும் திரையுலகம்!
கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் தமன்னா. அதைத் தொடர்ந்து படிக்காதவன், சூறா, நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் .கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த சினிமாவில் சர்வே செய்து வருகிறார் தமன்னா .இப்போது தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.
அது போக சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது விதவிதமான மாடல் உடை அணிந்து வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி தமன்னாவின் இமேஜையே உயர்த்தி காட்டி வருகிறது .ஸ்டைலான உடை அணிந்து பார்ப்பவர்களை கண் குளிர வைக்கிறார் தமன்னா. சில நாட்களாக நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் கிசுகிசுவில் இணைந்தார் தமன்னா.
இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது இருவருமே எங்கு போனாலும் தனியாக செல்வதை பார்க்க முடிகிறது .இருவருக்கும் இடையில் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் தமன்னா நடிப்பில் ஒடேலா 2 திரைப்படம் ரிலீஸாக இருக்கின்றது.
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது .அப்போது படத்தின் இயக்குனர் நந்தி தமன்னாவை பற்றி பேசும் பொழுது அவருடைய ஆர்வமும் அர்ப்பணிப்பும் 20 ஆண்டுகளாக டோலிவுட்டில் உச்சத்தில் வைத்திருக்க உதவியது .இது ஒரு சிறிய சாதனை கிடையாது. பெரிய விஷயம். அவருடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றி இருப்பதால் நான் இதை நம்பிக்கையுடன் சொல்ல முடியும் .உண்மையிலேயே அவர் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என அந்த படத்தின் இயக்குனர் கூறினார்.
ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இத்தனை வருடங்களாக சுற்றி வந்தவர் நயன்தாரா .சமீபத்தில் தான் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ஒரு அறிக்கை மூலமாக தெரிவித்து இருந்தார். அவருக்கு முன் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவரும் புகழ்ந்த நடிகை விஜயசாந்தி. இப்போது மூன்றாவதாக அந்தப் பட்டத்துடன் தமன்னாவை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.