கொஞ்சம் லேட் பிக் அப்...அவ்ளோதான்... கடைசியில் அடிச்சு தூக்கியது நாயகன்...! அசந்து போன ரஜினி!

by sankaran v |
கொஞ்சம் லேட் பிக் அப்...அவ்ளோதான்... கடைசியில் அடிச்சு தூக்கியது நாயகன்...! அசந்து போன ரஜினி!
X

Nayagan

ஆமை முயல் கதையை நாம் சிறுவயதில் கேள்விப்பட்டு இருப்போம். முயல் நாம் தான் வேகமாக ஓடி ஜெயித்துவிடுவோமே என்று அசால்டாக பாதி தூரம் சென்றதும் நல்லா படுத்து தூங்கி விடும்.

ஆனால் ஆமை மெல்ல மெல்ல போய் பந்தய எல்லையைக் கடந்து வெற்றி பெற்று விடும். அப்படிப்பட்ட இருபடங்கள் தமிழ்சினிமாவில் வந்து நம்மை வியக்க வைத்துள்ளன. இந்த அதிசயம் நடந்தது 1987ல்.

அந்த ஆண்டில் தீபாவளிக்கு கமல், ரஜினி படங்கள் வெளியாகி மோதின. கமலின் நாயகனும், ரஜினியின் மனிதனும் ஒரே நாளில் வெளியாகி பலத்த போட்டியை சந்தித்தன. முதலில் வேகமாக ஓடி சாதனை படைத்தது மனிதன். அதே நேரம் ஆரம்பத்தில் சறுக்கிய கமலின் படம், காலம் கடந்தும் கொண்டாடப்படும் படமானது நாயகன்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் வெளியான சமயத்தில் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏன்னா அப்போ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மனிதன் படம் வெளியானது.

Manithan

அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட். வார இறுதியில் கலெக்ஷனைப் பார்த்தால் நாயகனை மிஞ்சி நின்றது மனிதன். பி அண்டு சி சென்டரிலும் சக்கை போடு போட்டது. நாயகன் ஏ சென்டரில் மட்டுமே வரவேற்பு பெற்றது.

மணிரத்னம் ஒரு பேட்டியில் இதுகுறித்து இவ்வாறு சொல்கிறார். அக்னி நட்சத்திரம் படத்தைக் காட்டிலும் நாயகனுக்குத் தான் அதிகமாக உழைத்தோம். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றார்.

படத்தின் இந்த ஆவரேஜான வெற்றிக்கு என்ன காரணம்னா அந்தக் காலகட்டத்தில் நாயகன் அதாவது ஹீரோ படத்தின் முடிவில் இறந்து போகக்கூடாது.

அதை ரசிகர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்ஜிஆர் படங்களிலும் இதைப் பார்க்கலாம். அதனால் தான் நாயகன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

அதே நேரம் படத்தில் நாயகன் கமலின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். வேலுநாயக்கராகவே வாழ்ந்திருப்பார் மனிதர். படத்தின் திரைக்கதை கமல் என்ற அபார கலைஞனின் நடிப்புக்கு பெரும் தீனி போட்டது.

படத்தில் சிறுவயது முதல் முதியவராகும் வரை அவர் தோற்றத்திலும், நடையிலும், உடையிலும் எப்படி இவ்வளவு நேர்த்தியான நடிப்பைக் காட்ட முடிந்தது என்று அனைவரும் ஆச்சரியப்படுவர். அவ்வளவு அபாரமான நடிப்பு.

தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தையும், அதே நாளில் வெளியான மனிதன் படத்தையும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கொண்டாடினர். அதே நேரம் ரஜினியின் மனிதன் படத்தை குடும்பம் குடும்பமாகச் சென்று பார்த்தனர்.

நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக திரைக்கதை, நடிப்பு என பேசப்பட்டு, ஆரோக்கியமாக விமர்சிக்கப்பட்டு நாளாக நாளாக பிக் அப் ஆனது.

Nayakan kamal

90களில் டிவிகளில் வெளியான பிறகு தான் செம படம் பா என்ன ஒரு படம்...மனுஷன் பின்னி எடுத்துட்டான்யா... என கமலின் நடிப்பைப் பாமர ரசிகனும் பாராட்ட ஆரம்பித்தான். அப்போது தான் அவனுக்குள் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது நாயகன். கல்ட் கிளாசிக் என்ற அந்தஸ்தையும் பெற்றது நாயகன்.

படத்திற்காக இயக்குனர் மணிரத்னமும், கமலும் பல்வேறு விருதுகளை வாரிக்குவித்தனர். ஆனால் நாளாக நாளாக மனிதன் படம் மங்கி விட்டது. நாயகன் படம் பொக்கிஷமானது என்பதே உண்மை. இன்று காலம் கடந்தும் பேசப்படும் அளவிற்கு நாயகன் படம் உள்ளது என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் கமலின் கடின உழைப்பும், அபாரமான நடிப்பும் தான்.

அதே போல இயக்குனர் மணிரத்னமும் படத்தை செம்மையாக இயக்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சூப்பர்ஸ்டார் ரஜினி கூட 3 பெக் அடித்து விட்டும் படத்தைப் பார்த்து போதையே ஏறலன்னு வேற லெவல்ல நாயகன் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story