சூப்பர் ஸ்டார் சர்ச்சையே இன்னும் ஓயல! அதுக்குள்ள ‘லக்கி சூப்பர் ஸ்டாரா’? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

Published on: July 29, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் எல்லையில்லா வளர்ச்சி சினிமாவில் நடிக்க வரும் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் ஒரு பாடமாகவே அமையும். 70 வயதை கடந்தும் இன்னும் தன் சாதனையை நிகழ்த்தி வருகிறார்.

rajini1
rajini1

ரஜினி வயதில் இருக்கும் பெரும்பாலானோர் வீட்டில் அமர்ந்தவாறு பேப்பர்களை புரட்டிக் கொண்டிருக்கின்ற்னர். ஓய்வு எடுக்கும் வயதில் இன்னும் எதாவது ஒரு சாதனையை அடையவேண்டும் என்று விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே அவரை சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மட்டும் இல்லை சினிமாவில் இருக்கும் ஒரு சில முன்னனி நடிகர்களுக்கும் ஒரு சில அடையாள பட்டங்கள் உண்டு. உதாரணமாக சரத்குமாருக்கு சுப்ரீம் ஸ்டார், விஜய்க்கு தளபதி, பிரபுவுக்கு இளைய திலகம் , விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் , கமலுக்கு உலக நாயகன் என வெவ்வேறு விதமான பெயர்கள் கொடுத்து அழைத்து வருகின்றனர்.

rajini2
rajini2

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சரத்குமார் கூறியதில் இருந்து பல சர்ச்சைகள் வெடித்தன. அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். மேலும் விஜய் மீதும் ஏகப்பட்ட கடுப்பில் இருந்தார்கள். இதை பற்றி விஜயும் ஒன்றும் சொல்லவில்லை.

இதையும் படிங்க : சூப்பர்ஸ்டாரின் காலம் முடிந்துவிட்டது!.. கைதி பட தயாரிப்பாளரால் பற்றி எரியும் இணையதளம்…

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெய்லர் படத்தின் பாடல்கள் மூலம் சரியான பதிலடியை கொடுத்தார் ரஜினி. இந்தப் பட்டத்தை யாராலும் பறிக்க முடியாது என்பதை போல தெள்ளத்தெளிவாக கூறியிருந்தார். இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் லக்கி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு அடுத்த  நடிகர் களமிறங்கியிருக்கிறார்.

rajini3
rajini3

அதாவது லக்கி சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். அதில் ஹீரோவாக நடிப்பவர் ஜீவி பிரகாஷ். அந்தப் படம் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் வரும் அந்த விலங்குகளின் கிராபிக்ஸை பின்னனியில் வைத்து உருவாகப் போகிறதாம். விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.