தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் , நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என பெருமை பாராட்டப்பட்டவர் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி ” பராசக்தி ” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கு பலகோடி ரசிகர்கள் உருவாகினார்கள். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது ஒட்டுமொத்த திரைவிரும்பிகளையும் கவர்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். இவர் மிகவும் பொறுப்பான நடிகராக 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6 மணிக்கே செட்டிற்கு வந்துவிடுவராம். அதற்கு அடுத்த அந்த quality கொண்டிருக்கும் ஒரே நடிகர் விஜய் தானாம்.
ஆம், பகவதி படத்தின் 9 மணி ஷூட்டிங்கிற்கு 8 மணிக்கே கொட்டுற மழையிலும் குடைபிடித்து முதல் ஆளாக வந்து காத்துக்கொண்டிருந்தாராம். இவர்கள் இருவரும் தயாரிப்பளர்களின் வலியை புரிந்தவர்கள் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Vidamuyarchi: அஜித்தின்…
VijayTv: விஜய்…
விஜய் 69…
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…