சிம்புவுக்கு அடுத்து லிஸ்டில் சேர்ந்த விஷால்!.. நீ எல்லாம் திருந்தவே மாட்டியா!.. கிழித்தெடுக்கும் கே ராஜன்!..

கே ராஜன் இன்றைய கால தயாரிப்பாளர்களின் நிலையை பற்றி கூறுகிறார்

கே ராஜன் : இன்றைய காலகட்டத்தில் சினிமா என்பது வியாபாரம் சார்ந்த தொழிலாக உள்ளது உள்ளது. தயாரிப்பாளர்கள் 80 சதவீதம் பேர் தற்சமயம் திரைப்படத்துறையில் தோல்வியை சந்தித்து வருவதாக அதிர்ச்சி ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள். இந்த நிலையில் அவர் நிறைய தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுகளை ஒரு நேர்காணலில் சுட்டிக்காட்டி உள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது, அந்த காலத்தில் விநியோகஸ்தர்கள் படம் வருவதற்கு முன்னதாகவே இருபது சதவீதம் அட்வான்ஸ் ஆக கொடுப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பணத்தை வீடு வாசல் அனைத்தையும் வித்து படம் எடுத்து அதனை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்ற குழப்பத்திலேயே உள்ளனர். ஏனெனில் எடுத்த படத்தை வாங்குவதற்கு போதிய விநியோஸ்தர்கள் இல்லாத நிலையே இன்றைய தமிழ் சினிமாவில் மிகப்பெரிய குறையாக உள்ளது.

கே ராஜன்

கே ராஜன்

இதற்கெல்லாம் காரணம் படம் எடுப்பதற்கான தொகை கூடிவிட்டது சின்ன படத்திற்கான விலையே மூன்று கோடி அஞ்சு கோடி மற்றும் 10 கோடி வரையில் செலவாகும் என்பதால் நிறைய தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தினை எப்படியாவது விட்டு தீர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். படத்தை எப்படியாவது கஷ்டப்பட்டு கூட எடுத்துடுவாங்க ஆனா அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு படாதபாடு படுறாங்க இந்த காலத்தில் தயாரிப்பாளர்கள்.

இதையும் படிங்க- சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..

இன்றைய காலத்தில் விநியோகஸ்தர்களின் நிலை :

2000 ஆண்டுகளில் இருந்த விநியோகஸ்தர்கள் நன்றாக செழிப்பாக இருந்தார்கள். ஆனால் தற்சமயம் இருக்கும் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் வகையில் அவர்களது நிலைமை பரிதாபமாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் உள்ளது தமிழ் சினிமாவில் உள்ள விநியோகஸ்தர்களின் நிலைமை.

தற்போது உள்ள நிலையில் நிறைய திரைப்படங்கள் படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே அந்த படத்திற்கான வெற்றி விழாவை கொண்டாடி வருகிறார்கள் காரணம் மக்கள் முன்பு இந்த படம் வெற்றியாகிவிட்டது என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளனர். மேலும் தங்களுடைய திரைப்படம் ஓடவில்லை என்றாலும் வெற்றி விழா கொண்டாட தவருவதே இல்லை இன்றைய கால தயாரிப்பாளர்கள். இதனைப் பார்க்கும் பொழுது நானும் ரவுடிதான்!!.. நானும் ஜெயிலுக்கு எல்லாம் போறேன்!!.. அப்படின்னு சொல்ற வடிவேலு டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது அப்படின்னு கிண்டலா கே ராஜன் சொல்கிறார்.

கே ராஜன்

கே ராஜன்

தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்கள் எப்படி மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது என்பதை இரண்டு நாட்களிலேயே கண்டுபிடித்து விடலாம். ஏனெனில் ஒரு படத்திற்கு ஹவுஸ்புல் சோ இரண்டு நாட்கள் ஓடினாலே அந்த படத்தின் மீது மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டு பார்க்க வருகிறார்கள் என்று அர்த்தம்.அதே போல சின்ன பட்ஜெட் திரைப்படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.அந்த வகையில் தற்போது வெளியான போர் தொழில், குட் நைட் போன்ற திரைப்படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். ஆனாலும் மக்களிடம் நன்கு வரவேற்பு பெற்றதன் மூலம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

சிம்பு

சிம்பு

சினிமா உலகம் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது?

கே ராஜன் அவர்கள், சினிமா உலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மாதிரியே தெரியல.. எங்கிருந்தோ பெரிய பெரிய பண முதலைகள் அவர்களுடைய பணத்தை திரைப்படத்தில் வந்து கொட்டுகிறார்கள். ஆனால் படத்தை எடுத்து முடித்த பிறகு தான் அவர்களுக்கு தேவையில்லாமல் இந்த படத்தை எடுத்திட்டமோ அப்படி என்கிற எண்ணத்தை கொண்டு வருகிறது. காரணம் அந்த படத்தை விநியோகிக்க யாரும் முன்வராத நிலையில் நிறைய திரைப்படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளன.
தற்சமயத்தில் சினிமாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கே ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விஷால்

விஷால்

இந்தந்த நடிகர்கள் திருந்த வேண்டும்:

மேலும் அவர் கூறியதாவது நிறைய நடிகர்கள் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு திரைப்படத்தில் கால் சீட் கொடுக்கிறார்கள். இதில் முக்கியமான நடிகர்கள் கூட இப்படித்தான் செய்கிறார்கள் உதாரணமாக நடிகர் சிம்பு மற்றும் விஷாலும் அந்த லிஸ்டில் இருக்கிறார் ஒரு தயாரிப்பாளர் உங்களை நம்பி படம் எடுப்பதற்கு முன்னதாகவே பணம் கொடுத்து விட்டால் அந்த அந்த படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்திற்கு நீங்கள் நடிக்க தயாராக வேண்டும் அதை விட்டுட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்திற்கு புக் செய்வது நியாயமாக இல்லை இது அந்த படத்திற்கு நடக்கும் ஒரு துரோகம் ஆகும்.

இப்படி தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் தற்சமயம் சினிமா உலகில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிலை பற்றி அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க- சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..

Related Articles
Next Story
Share it