Cinema News
சினிமாக்கு டாட்டா காட்டும் ஐடியாவில் அஜித்.. பரபரப்பாகும் டிசம்பர் மாதம்.. ஏங்க இப்படி?
Ajithkumar: நடிகர் அஜித்குமார் தன்னுடைய அடுத்தக்கட்ட திட்டத்தை மாற்றி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதுகுறித்த பரபரப்பான தகவலும் கசிந்து இருக்கிறது.
துணிவு படத்தை முடித்த கையோடு அஜித்குமார் பைக்கில் உலக சுற்றுலா சென்றார். இப்போ வருவார் அப்போ வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆறு மாதம் கழித்தே விடாமுயற்சி படத்தில் இணைந்தார். தொடர்ந்து அப்படம் முடிவதற்குள் குட் பேட் அக்லியை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: விஜய் டிவியில் இருந்து வந்தா எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆயிட முடியாது?!.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்!..
இதை தொடர்ந்து இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் டிசம்பரில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்தின் இறுதி வேலைகள் இன்னும் பாக்கி இருப்பதால் சம்மர் விடுமுறைக்கு ரிலீஸ் தள்ளிப்போனது.
தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஜனவரி 10க்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது இதன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் விலகி இருப்பது வேறு படக்குழுவுக்கு அதிர்ச்சியான சம்பவமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுந்தர்.சி.யைக் கெட்டவார்த்தை போட்டு திட்டிய மணிவண்ணன்… இதுக்கெல்லாமா திட்டுவாரு?
இந்நிலையில் பல்கேரியாவில் நடந்து வந்த 45 நாட்கள் ஷூட்டிங் இன்றுடன் முடிய இருக்கிறது. இதை தொடர்ந்து பார்சிலோனாவின் நடக்க இருக்கும் ரேஸிங் டிரையல்ஸில் கலந்துக்கொள்ள இருக்கிறார். அதை தொடர்ந்து குட் பேட் அக்லிக்கு 7 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. அதை முடித்துவிட்டால் படத்தின் எல்லா ஷூட்டிங் முடிவடைந்துவிடும்.
அதை தொடர்ந்து டிசம்பர் 11ந் தேதியில் இருந்து விடாமுயற்சியில் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் வரை ரேஸிங்கில் ஆர்வம் காட்ட இருக்கிறாராம். செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் அடுத்தக்கட்ட பட அறிவிப்பே வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயை தொடர்ந்து அஜித்தும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .