முதல் முறையாக நடிகர் விஜய் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். தற்போது பீஸ்ட் படத்தை முடித்துள்ள விஜய் அடுத்ததாக அவரின் 66 வது படமாக உருவாக உள்ள தெலுங்கு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்ககுவதும் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும், தளபதி 66 படத்தில் இசையமைப்பாளராக தமனும், நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தில் ராஜூ, “தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என்றார். அந்த வகையில், தளபதி 66 படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்த நேரத்தில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே, தீபாவளி அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இதனை தொடர்ந்து, இயக்குனர் H.வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் – அஜித்குமார் கூட்டணி நேர்கொண்ட பார்வை எனும் சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து இந்த வலிமை படத்தில் இணைந்தது. தற்போது இந்த கூட்டணி 3வது முறையாக இணைய உள்ளது.
இந்த படத்திற்கு தற்போதைக்கு AK-61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங்கிற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பின்னர் மார்ச் 3ஆம் தேதி அஜித்திற்கு உகந்த வியாழக்கிமை அன்று படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகிவில்லை.
இதையும் படியுங்களேன் – #Breaking : அனுமதி தந்த விஜய்.! களைகட்ட போகுது உள்ளாட்சி தேர்தல்.!
அதாவது, இப்போ என்ன ஒரு அதிர்ச்சி என்றால் விஜய்யின் 66வது படம் அஜீத்தின் 61வது படமும் ஒரே நாளில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், அதன் ஷூட்டிங் 4 மாதங்களுக்குள் முடிவதாகவும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரைக்கும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால். இந்த இரண்டு படமும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், என்ன நடக்க போவது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…