இந்த சரக்கு அடிங்க...சூப்பரா இருக்கும்....சிம்பு பட நடிகை வெளியிட்ட வீடியோ
நடிகர், நடிகைகள் மதுபானம் தொடர்பான விளம்பரங்களை நடிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. முதலில் இதை துவக்கி வைத்தது பாலிவுட் நடிகர்கள்தான். தர்மேந்திரா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சில மதுபான விளம்பரங்களில் நடித்துள்ளனர். இது அப்போதே சர்ச்சையானது.
அதேபோல், நடிகைகள் என்றால் துணிக்கடை, நகை, அழகு சாதன பொருட்கள் ஆகியவை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பார்கள். ஆனால், தற்போது அவர்கள் மதுபானம் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க துவங்கிவிட்டனர்.
ஏற்கனவே, அமலாபால், ஹன்சிகா, ராய் லட்சுமி உள்ளிட்ட சில நடிகைகள் இது போன்ற விளம்பரங்களில் நடித்தனர். குறிப்பிட்ட மதுபான பிராண்ட் வகையை அருகில் வைத்தும், கையில் வைத்தும் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வரிசையில் நடிகை நித்தி அகர்வாலும் சேர்ந்துள்ளார். இவர் பூமி மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்தவர். ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மதுபானத்தை கையில் எடுத்து முகர்ந்து பார்த்து அதன் வாசம் நன்றாக இருப்பதாகவும், இந்தியாவிலேயே இது சிறந்த மதுபானம் என்றெல்லாம் பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.