
Cinema News
கடைசி வர சிம்பு பெயரை சொல்லவே இல்லையே.! ‘அந்த’ நடிகை மீது வருத்தத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து அந்த இரண்டு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நாயகி நிதி அகர்வால். ஜெயம் ரவி நடித்த பூமி OTTயிலும், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரையரங்கிலும் வெளியானது. இரண்டிலும் நிதி அகர்வால் தான் ஹீரோயின்.
அந்த படம் முடித்த பிறகு அவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். தெலுங்கில் தற்போது இளம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்த பிறகு சிம்புவுடன் கிசுகிசுவில் சிக்கினார். மேலும், சிம்புவின் அடுத்தடுத்த படங்கள், கால்சீட் விவரங்களை நிதி அகர்வால் தான் கவனித்து கொள்கிறார் என்ற அளவுக்கு வதந்திகள் குவிந்து வந்தன.
ஆனால், இவை எதற்க்கும் இருதரப்பும் எந்தவித ரியாக்சனும் கொடுக்காமல் கடந்துவிட்டன. அந்த வதந்திகளும் காற்றில் கரைந்த கற்பூரமாக மாறிவிட்டது.
அண்மையில், ஒரு நேர்காணலில் நிதி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என் கேட்க, சூப்பர் ஸ்டார் ரஜினி என கூறி விடுவார். அவர் வயதில் மூத்தவர் வேறு யாராவது சொல்லுங்கள் என தொகுப்பாளர் கூறவே, ‘எனக்கு, ரன்பீர் கபூர் என பாலிவுட் நடிகரை பிடிக்கும்.’ கூறிவிட்டார் நிதி அகர்வால்.
இருந்தாலும் தொகுப்பாளர் விடாமல், அவர் பாலிவுட் நடிகர். நீங்கள் தமிழகத்தில் யாரையாவது சொல்லுங்கள் என்று கேட்கவே, திருதிருவென முழித்துவிட்டு, டக்கென மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என கூறிவிட்டார்.
இதையும் படியுங்களேன் – அம்மாவிடம் உண்மையை ஒத்துக்கொண்ட தளபதி விஜய்.! ஒரு வீடியோ மூலம் எல்லாம் தெரிஞ்சிடுச்சி…
இதனை பார்த்த ரசிகர்கள், சிம்புவுடன் தான் முதல் தமிழ் படத்தில் நடித்திருந்தார்நிதி, அப்படி இருக்கவே, தனது முதல் பட ஹீரோ சிம்பு பெயரை தைரியமாக சொல்லலாமே. என்று பலரும் கூறி வருகின்றனர். இருந்தாலும் வீண் வம்பில் சிக்கி விடவேண்டாம் என்று இளம் நடிகர்கள் பெயரை முற்றிலுமாக தவிர்த்து, மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை சொல்லி புத்திசாலித்தனமாக தப்பித்துவிட்டார் நிதி அகர்வால்.