Nikhila vimal: தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நிகிலா விமல். சிறுமியாக இருக்கும்போதே மலையாள படங்களில் நடித்தவர் இவர். தமிழில் வெற்றிவேல் என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் சசிக்குமாருக்கு மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read
சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். அழகாகவும் இருப்பதோடு, சிறப்பாகவும் நடிக்கும் நடிகை இவர். நடிப்பு திறமையை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். பஞ்சு மெத்தை, தம்பி, ரங்கா, போர்த்தொழில் ஆகிய படங்களில் நடித்திருந்தார். திறமையான நடிகையாக இருந்தும் இன்னும் சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

ஒருபக்கம், மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்திலும் நிகிலா நடித்திருக்கிறார். தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மத்தகம் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். நல்ல நடிகையான இவர் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

ஒருபக்கம், க்யூட்டான உடைகளை அணிந்து அழகை காட்டி போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், கருப்பு நிற அழகான உடையில் போஸ் கொடுத்து நிகிலா விமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.




