என்னங்கடா இப்படி புரளியா கிளப்புறீங்க... கடுப்பான நிக்கி கல்ராணி...

by Akhilan |
என்னங்கடா இப்படி புரளியா கிளப்புறீங்க... கடுப்பான நிக்கி கல்ராணி...
X

தமிழ் சினிமாவின் நெக்ஸ்ட் க்யூட் கப்புளான நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக கசிந்த வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.

மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் நடித்து வந்தவர் தமிழில் டார்லிங் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அப்படம் வெற்றியால் தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

நிக்கி-ஆதி

நிக்கி கல்ராணி காதல்:

நிக்கி கல்ராணி தன்னுடன் நடித்து நடிகர் ஆதியை காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இருவரும் இதற்கு மறுப்பு சொல்லாமல் மௌனம் காத்து வந்தனர். சில வருடம் காதலித்த பின்னர், நிச்சயத்தார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களை போட்டு தங்கள் காதலை வெளியுலகிற்கு கூறியிருந்தனர். இதை தொடர்ந்து இருவரும் மே18 2022ல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர் கணவர் ஆதியும் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் மகனாக ஆதி தமிழ் சினிமாவில் மிருகம் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். இப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தாலும், ஆதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

நிக்கி

நிக்கி-ஆதி

தொடர்ச்சியாக அமைதியாக அவர் வெளிப்படுத்திய நடிப்புக்காக ஈரம் படமும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தினை ஷங்கர் தயாரித்து இருந்தார். தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வர இவருக்கும் நடிகர் அந்தஸ்த்து கிடைத்தது.

எல்லாம் வதந்தி:

தன் சக நாயகியாக நடித்த நிக்கியை திருமணம் செய்து கொண்ட பிறகு இருவரும் வெளிநாடு ஹனிமூன் சென்று வந்தனர். அந்த புகைப்படம் எல்லாம் சமூக வலைத்தளங்கள் வைரலானது. தொடர்ச்சியாக தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிக்கி, நான் கர்ப்பமாகலாம் இல்லை. அது வெறும் வதந்தி தான். அப்படி நடந்தால் அறிவிக்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.

Next Story