வயிற்றில் மாங்கு மாங்கென குத்தும் நிக்கி கல்ராணி.. அசையாமல் நிற்கும் நடிகர்!
பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை நிக்கி கல்ராணி ஜி.வி.பிரகாஷ் குமார், சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாகியாக அறிமுகமானார். இதற்கு முன்னதாகவே இவர் மலையாளம் மற்றும் கன்னடாவில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சுந்தர்.சி, பூனம் பாஜ்வா நடிப்பில் தமிழில் வெளியான 'முத்தின கத்தரிக்க' என்ற படத்தின் ஒரிஜினல் பதிப்பான 'வெள்ளிமூங்கா' என்ற மலையாளப்படத்தில் நிக்கி தான் நாயகி. டார்லிங் படத்திற்குப் பின் இவர் யாகாவாராயினும் நாகாக்க, கோ-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மரகத நாணயம், கலகலப்பு -2 உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தார்.
இதில் ஒரு சில படங்கள்தவிர மற்ற படங்கள் சரியாக ஓடவில்லை.இருந்தாலும் எப்படியாவது முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என புதிய படவாய்ப்புகளை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளார். தற்போது தமிழில் ஒரு படம், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் அர்ஜுன் வயிற்றில் தொடர்ந்து குத்தி பாக்சிங் செய்கிறார் நிக்கி. அர்ஜுன் எதோ எறும்பு கடித்ததைப்போல் எந்த ஒரு ரியாக்சனுமே இல்லாமல் இருக்கிறார்.