அட அட என்ன அழகு.. மனதை கொள்ளைகொள்ளும் போட்டோவை வெளியிட்ட நிக்கி!!

by ராம் சுதன் |
nikki galrani
X

பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2014ல் '1983' என்ற மலையாளப்படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் கன்னட படங்களில் நடித்த இவர் 2015ல் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ருஷ்டி டாங்கே நடித்த டார்லிங் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

அதன்பின்னர் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன், கோ 2, கலகலப்பு 2 உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். பார்ப்பதற்கு வெண்ணை போல பளபளவென இருந்ததாலும், இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதாலும் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வந்தது.

nikki galrani

nikki galrani

தற்போது இவர் நடிப்பில் இடியட் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அது தவிர ராஜவம்சம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்திலும் இரண்டு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் தவிர இவர் கைவசம் வேறு படங்கள் ஏதும் இல்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு உடையில் பளபளவென மெழுகுச்சிலை போல இருக்கும் படத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரது அழகில் உறைந்துபோய் உள்ளனர். இந்தப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story