எவ்வளவு அழகா கொஞ்சி கொஞ்சி பேசுறாங்க.. நிக்கிய இப்படி பண்ணிடீங்களே..!!

by ராம் சுதன் |
nikki galrani
X

கடந்த 2014ல் '1983' என்ற மலையாளப்படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பின் கன்னடா மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்த இவர் 2015ல் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

அதன்பின்னர் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன், கோ 2, கலகலப்பு 2 என 15க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். என்னதான் அதிக படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த இந்தப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை.

nikki galrani

இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் படத்தில் மட்டும்தான் இவரது நடிப்பு பலராலும் பரவலாக பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது இன்ஸ்ட்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசியபடி பலூனை உடைத்து விளையாடுகிறார். பலூனை போடுபவர் கடைசியாக தண்ணீர் நிரம்பிய பலூனை அவர்மீது போட்டுவிடுகிறார். இந்த வீடியோவில் நிக்கியின் ரியாக்ஷன் க்யூடாக உள்ளதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

தற்போது இவர் நடிப்பில் இடியட் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அது தவிர ராஜவம்சம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்திலும் இரண்டு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் தவிர இவர் கைவசம் வேறு படங்கள் ஏதும் இல்லை.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story