பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்.... மாப்பிள்ளையும் நடிகர் தாங்க... யார் தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் ஏற்கனவே சூர்யா ஜோதிகா, சினேகா பிரசன்னா, ஆர்யா சாயிஷா என ஏகப்பட்ட நட்சத்திர தம்பதிகள் உள்ளனர். இந்நிலையில் இந்த வரிசையில் விரைவில் ஒரு இளம் நட்சத்திர தம்பதிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி டார்லிங் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணியும், மிருகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆதியும் தான் அந்த நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவருமே தமிழில் ஏகப்பட்ட சிறு பட்ஜெட் படங்களில் நடித்து ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர்.
இந்நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் இணைந்து மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளனர். அப்போது முதலே இருவரும் காதலிப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் நிலவி வந்தது. ஆனால் இருவருமே இதுகுறித்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கவில்லை.
இதுதவிர ஆதி வீட்டில் நடந்த விழா ஒன்றில் நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வைரலானது. எந்த திரைபிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில், நிக்கி கல்ராணி மட்டும் அந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் அவர்களின் காதல் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி மற்றும் ஆதிக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கசிந்து வருகிறது. இந்த வருடம் இவர்கள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.