
Cinema News
அந்த இயக்குனர் ரொம்ப மோசம்… கதறிய காஞ்சனா பட நடிகை….!
தென்னிந்திய இயக்குனர் ஒருவர் தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாக பிரபல நடிகை ஒருவர் குற்றம் சாட்டி கதறி அழுத சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை வேறு யாருமல்ல காஞ்சனா 3 படத்தில் ஓவியா மற்றும் வேதிகாவுடன் இணைந்து நடித்த நடிகை நிக்கி டம்போலி தான்.
இவர் முன்னதாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து திப்பரா மீசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்த நிக்கி டம்போலி காஞ்சனா படத்தையும் சேர்த்து தென்னிந்தியாவில் மூன்றே படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிக்கி டம்போலி தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “தென்னிந்திய இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
மோசம் என்றால் தவறாக அல்ல. மற்ற நடன கலைஞர்கள் மத்தியில் என்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார். அன்று நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீட்டிற்கு அழுதுகொண்டே சென்றேன்” என கூறியுள்ள நிக்கி டம்போலி அந்த இயக்குனன் யார் என்பதை கூற மறுத்து விட்டார்.
இவர் இதுவரை இரண்டு தெலுங்கு படங்கள் மற்றும் ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்துள்ளதால் அந்த மூவரில் ஒருவரை தான் கூறுகிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.