வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் சிங்கிள்.. தனுஷ் வாய்ஸ் மாஸு
Dhanush: மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கும் படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தை தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது .ஒரு காதல் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இந்த படத்தை எடுத்து வருகிறார் தனுஷ்.
படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை பொருத்தவரைக்கும் முதலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் படத்தை இயக்குவதாக இருந்தது.
.அதற்கான அறிவிப்பும் 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இந்த ப்ராஜெக்ட் அப்போது கைகூடவில்லை.
அதனால் தனுஷ் இந்த திரைக்கதையை வாங்கி அவரே இயக்க திட்டமிட்டு இருந்தார். இதன் மூலம் தனுஷின் மூன்றாவது இயக்குனரான படமாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற ஒரு பாடல் இப்போது வெளியாகியிருக்கிறது.
இந்த பாடலில் பிரியங்கா மோகன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து நடனமாடி இருக்கிறார். ஒரு பெப்பியான காதல் பாடலாக ஜிவி பிரகாஷ் இந்த பாடலை இசை அமைத்திருக்கிறார். இதில் ஹைலைட்டாக இருப்பது தனுஷின் வாய்ஸ்.
எத்தனையோ பாடல்கள் பாடி இருக்கும் தனுஷ் இந்தப் பாடலில் ஒரு வித்தியாசமான வாய்ஸை முயற்சி செய்திருக்கிறார். அதுதான் இப்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பாடலும் இப்போது உள்ள 2k கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இதோ அந்த வீடியோ: