தியேட்டரில் விட்டதை ஓடிடியில் பிடிக்க போகும் தனுஷ்… NEEK ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

nilavukku enmel ennadi kovam
OTT: தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராக வெற்றி மகுடம் சூடி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது கூட நித்தியா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் இட்லி கடை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் டிராகனுடன் போட்டியாக வெளியானது. படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் டிராகன் திரைப்படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியால் இப்படத்தின் வசூல் அடிபட்டது.

nilavukku enmel ennadi kovam
இந்நிலையில் தற்போது டிராகன் திரைப்படம் மார்ச் 21ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அதை நாளில் அமேசான் ப்ரைம் தளத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
தியேட்டரில் தொலைத்த வெற்றியை ஓடிடியில் இத்திரைப்படம் கைப்பற்றுமா என்பதை குறித்த பேச்சுகள் எழுந்து இருக்கிறது. மேலும், சமீபத்திய நாட்களாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் அங்கு நல்ல வரவேற்பு பெற்றாலும் ஓடிடியில் எதிர்மறையான விமர்சனங்களை குவித்து வருவதும் ஏற்படத்திற்க்கு பிரச்சினையாக மாறுமா எனவும் பேச்சுகள் என்னடா பண்ற அடிபட்டு வருகிறது.