1980களில் தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நிரோஷா. இவர் பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மணி ரத்னம் இயக்கிய “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தின் மூலம்தான் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார்.

“அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தை தொடர்ந்து நிரோஷா நடித்த திரைப்படம் “சூரசம்ஹாரம்”. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

நிரோஷா “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே “சூரசம்ஹாரம்” திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. “சூரசம்ஹாரம்” திரைப்படத்தின் இயக்குனரான சித்ரா லட்சுமணன், பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

பாரதிராஜா தனது நடிகைகளுக்கு “R” என்ற எழுத்தில் தொடங்குவது போல்தான் பெயர் வைப்பார். இது அவருக்கு ஒரு சென்ட்டிமென்ட்டாக இருந்தது. “மண் வாசனை” திரைப்படத்தில் ஆஷா என்ற பெயர்கொண்ட புதுமுக கதாநாயகியை நடிக்க வைத்த பாரதிராஜா, ரேவதி என்று பெயர் மாற்றி அவரை அறிமுகப்படுத்தினார்.
அதே போல் “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் சந்திரிகா என்ற புதுமுக கதாநாயகியை நடிக்க வைத்த பாரதிராஜா, ராதா என்று பெயர் மாற்றி சினிமாவுக்குள் அவரை அறிமுகப்படுத்தினார்.

பாரதிராஜாவை போலவே சித்ரா லட்சுமணனும் நிரோஷாவின் பெயரை மைதிலி என்று மாற்றியிருக்கிறார். அதாவது நிரோஷா அறிமுகமான “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தில் அவரது பெயர் நிரோஷா என்று டைட்டிலில் வரும். ஆனால் அதற்கு அடுத்த திரைப்படமான “சூரசம்ஹார”த்தில் மைதிலி என்றுதான் வரும்.

ஆனால் பிற்காலத்தில் தனது பெயரை மீண்டும் நிரோஷா என்று போடும்படி மாற்றிக்கொண்டாராம் நிரோஷா.
இதையும் படிங்க: வடிவேலுவை தொடர்ந்து ரெட் கார்டு வாங்கப்போகும் காமெடி நடிகர்?… என்னப்பா பிரச்சனை!





