Categories: Cinema History Cinema News latest news

கமலே என்னிடம் அனுமதி கேட்டுத்தான் செய்வார்… நீங்க என்ன? சக நடிகரிடம் எகிறிய நிரோஷா…

தமிழ் சினிமாவில் நாயகியாக சில காலம் வலம் வந்த நிரோஷா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

எம்.ஆர்.ராதாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் நிரோஷா. இவருடன் பிறந்தவர் தான் நடிகை ராதிகா. அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு நிலவியது. இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது.

நிரோஷா

தொடர்ச்சியாக நடித்து வந்தவருக்கு நடிகர் ராம்கியுடன் காதல் பிறந்தது. ஆனால், இது நிரோஷா மற்றும் ராதிகா தாயாருக்கு பெரிய விருப்பமில்லை என்பதால் தனது மகளை தொடர்ந்து கண்டித்து வந்தார். இதனால் நிரோஷா அடிக்கூட வாங்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததை அடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நிரோஷா

இந்நிலையில், இருவரும் காதலித்ததற்கு முன்னர் எப்போதும் சண்டைக்கோழி போல சண்டை போட்டுக்கொண்டு தான் இருந்தார்களாம். நெக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நிரோஷா, ராம்கியினை திட்ட தொடங்கி விடுவாராம். கமல் சாரே என்னிடம் அனுமதி வாங்கி தான் தொட்டு நடிப்பார். நீங்க என்ன உங்க இஷ்டத்துக்கு நடிக்கிறீங்க எனக் கடுப்படிப்பாராம். இப்படி சண்டையில் துவங்கி தான் காதலில் முடித்ததாக நிரோஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Akhilan