தாய்க்கிழவி நித்யா மேனன் பிறந்தநாள்!.. இட்லி கடையில் என்ன பண்ண காத்திருக்காரோ!.. செம ஸ்டில்ஸ்!

நடிகை நித்யா மேனன் இன்று அவரது 37வது பிறந்தநாளை முன்னிட்டு சென்ற ஆண்டில் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை நித்யா மேனன் ஆங்கிலத்தில் வெளியான ஹனுமான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், கன்னட படமான 7மணி படத்தில் துணை நடிகையாக நடித்த அவர் ஆகாச கோபுரம் என்ற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜோஷ், இஷ்க், ஒக்கடைன், மாலினி 22 பாளையங்கோட்டை , பெங்களூர் நாட்கள் என பல படங்களில் நடிதிருந்தாலும் ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகரித்தது.

நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருந்தாலும் அவர் பெரும்பாலும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் காஞ்சனா 2, மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் பணிபுரிகிறார்.

நடிகை நித்யா மேனன் நடிப்பில் இட்லி கடை, ரவி வர்மா, பிரானா, கோலம்பி உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளது. ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருந்த இட்லி கடை திரைப்படம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நித்யா மேனன் கடந்த ஆண்டு அவர் தேசிய விருது பெற்றது, வெளிநாடுகளுக்கு செல்லும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் நித்யா மேனனுக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.