கோட்டை விட்ட தனுஷ்…தட்டி தூக்கிய நித்யா மேனன்… 2 தேசிய திரைப்பட விருதை வென்ற திருச்சிற்றம்பலம்..
Nithya menon: 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தட்டி சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: கங்குவா டிரெய்லரை இப்பவே விட்டதன் மர்மம்… அடேங்கப்பா எவ்ளோ பெரிய செக்கை வச்சிருக்காங்க..!
இப்படம் ரிலீஸ் ஆன போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நடிகை நித்தியா மேனனின் கதாபாத்திரத்திற்கு வரவேற்பும் குவிந்தது. இந்நிலையில் தான் தற்போது தேசிய விருது சிறந்த நடிகைக்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதை குஜராத் மொழியில் கட்ச் எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த மானசி பிரேக்குடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
2008ம் ஆண்டில் இருந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் நித்யா மேனன். மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் காஞ்சனா2, இருமுகன், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். எனினும் திருச்சிற்றம்பலம் படத்தில் இயல்பாக நடித்து அசத்தி தற்போது விருதையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: 70வது தேசிய திரைப்பட விருதுகள்… முந்திக்கொண்ட பொன்னியின் செல்வன்… சிறந்த நடிகர் யார்?
தனுஷுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகர் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை. பல மொழி ரசிகர்களை கவர்ந்த ரிஷப் ஷெட்டி தனிஆளாக சிறந்த நடிகர் விருதை காந்தாரா படத்திற்கு தட்டி சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.