
Cinema News
கொட்டும் மலையில் நடுரோட்டில் ஆட்டம் போட்ட நடிகரின் மனைவி..!!
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம்வந்தவர் நடிகர் தாடி பாலாஜி. தற்போது பிரபல தனியார் சேனல் ஒன்றில் இவர் பணியாற்றிவருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனாலும், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டார். இதே சீசனில் இவரது மனைவியும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் செய்த கூத்துக்கள் மக்கள் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.

dhadi balaji-nitya
இந்நிகழ்ச்சிக்குப் பின் அவ்வப்போது தொலைகாட்சி நிகழ்ச்சியில் தலை காட்டி வருகிறார் அவரது மனைவி நித்யா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சென்னையில் கொட்டும் மலையில் ரோட்டில் நின்று நடனமாடுகிறார். அந்த விடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்