இப்படி பாத்தா கூடவே வந்திடுவோம்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நிவேதா பெத்துராஜ்!…
மதுரையை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரின் குடும்பம் துபாயில் செட்டில் ஆனது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்குதான் முடித்தார்.
மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு மிஸ் இண்டியா துபாய் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டிகளில் கடைசி 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
தமிழில் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பொதுவான என் மனசு தங்கம், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
சினிமா துறையில் அஜித்துக்கு பின் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை இவர். சில போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். மேலும், கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடையில் கிக் ஏத்து லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.