சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகும் ரஜினி, கமலின் ரீல் மகள்.. வருத்தத்தில் இளைஞர்கள்!..

விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்த நிவேதா தாமஸ் கமல்ஹாசனுக்கு மகளாக பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
28 வயதாகும் நடிகை நிவேதா தாமஸ், விஜய் நடித்த குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிவேதா தாமஸ் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோயினாகவும் நடித்து கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: ஏவிஎம் நிறுவனம் இப்போ ஏன் படம் தயாரிக்கலன்னு தெரியுமா? கோலிவுட்டையே டாரு டாரா கிழிச்சிட்டாரே..!
2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சாப்பா குரிஷ் படத்தில் ஹீரோயினாக நடித்த நிவேதா தாமஸ் தமிழில் போராளி படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் ஜெண்டில்மேன் படத்தில் நானிக்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.
2015ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு மகளாக பாபநாசம் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு நடித்த தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: 3 நாளா முக்கும் கோட் மினி டீசர்!.. பெருசா வியூஸ் கூட வரலை!.. விஜய் ஃபேன்ஸுக்கே பிடிக்கலையா?..
இந்நிலையில், திடிரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடைசியாக அந்த நல்ல விஷயம் நடக்கப் போகுது என லவ் எமோஜியையும் போட்டுள்ள நிலையில், விரைவில் நிவேதா தாமஸ் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என தகவல்கள் வைரலாக தொடங்கி விட்டன.
கடைசியாக சாகினி தாகினி என ரெஜினா கசாண்ட்ராவுடன் உமன் சென்ட்ரிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் நிவேதா தாமஸ். கடந்த ஆண்டு வெளியான எந்தடா சாஜி படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிவேதா தாமஸ் சீக்கிரமே திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகப் போகிறார் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: காத்திருக்கும் நெல்சன்!.. குறுக்கே கெளஷிக்கா உள்ளே நுழையும் அட்லீ!.. கூலிக்கு அடுத்து பெரிய சம்பவம்?