ரஜினி மகளா இது? இவ்ளோ குண்டாயிட்டாங்க.. சத்தியமா நம்ப முடியல
Nivetha Thomas: ரஜினி மற்றும் கமலுக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் இவர் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் மலையாளத்தில் வெருதே ஒரு பம்பா என்ற திரைப்படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நிவேதா தாமஸ்.
அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரமான கேரள மாநில அரசின் திரைப்பட விருதை பெற்றிருக்கிறார். அதை போல தெலுங்கில் நிவேதா ஜெண்டில்மேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் நிவேதா தாமஸ்.
இதையும் படிங்க: மீண்டும் அந்த இயக்குனரா… அஜித் ரசிகர்களுக்கே இது வருத்தமான செய்திதான்… சும்மா இருக்கலாம்!..
தமிழில் ஜில்லா, தர்பார் மற்றும் பாபநாசம் போன்ற படங்களில் நடித்த நிவேதா தாமஸை தர்பார் படத்திற்கு பிறகு தான் தமிழ் மக்கள் அவரை அடையாளம் கண்டனர். ஏனெனில் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக ரஜினியுடன் இனைந்தே பல காட்சிகளில் நடித்திருப்பார். பாப நாசம் படத்தை பொறுத்தவரைக்கும் கமலை மையப்படுத்திதான் அந்தப் படம் நகரும்.
அதனால் நிவேதா தாமஸ் அந்தளவுக்கு பாபநாசம் படத்தில் தெரியவில்லை. ஆனால் தர்பார் படம் அப்படி இல்லை. அவரை ரஜினி மகள் என்றே அழைக்க ஆரம்பித்தனர். இந்த மூன்று படங்களுக்கு பிறகு நிவேதா தாமஸை தமிழில் பார்க்கமுடியவில்லை. மற்ற மொழிப் படங்களிலும் அவர் நடிப்பதாக தெரியவில்லை.
இதையும் படிங்க: அந்த ஒரு படத்தில் நடிச்சதால 23 பட வாய்ப்பை மிஸ் பண்ண நடிகை! இப்ப அவங்க நிலைமை?
இந்த நிலையில் திடீரென நிவேதா தாமஸின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் யாரும் எதிர்பாரா அளவில் ஆளே மாறிப் போயிருக்கிறார் நிவேதா தாமஸ். மிகவும் குண்டாக இது நிவேதா தாமஸா என்று கேட்கும் அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.
இன்னும் அதே குழந்தைத் தன்மையான முகத்தையே மக்கள் நியாபகம் வைத்திருக்கும் நிலையில் நிவேதாவின் இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/C_VyVCVPkbi/?igsh=MWZramVyZW05M2Zlcw==