Categories: Entertainment News

மஞ்சிமாவையே மிஞ்சிருவிங்க போல…! மொழுக் மொழுக்குனு இருக்கும் ரஜினியின் மகள்..

தமிழில் ஜில்லா படம் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். ஏற்கெனவே குருவி படத்தில் வெற்றிவேல் கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. அதிலும் கமலுக்கு மகளாக நடித்து அசத்தியிருப்பார். இப்படம் மூலம் தமிழ் சினிமா உலகில் மேலும் பரிட்சயமானார். அதையடுத்து தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். தமிழ் சினிமா உலகின் இரண்டு ஜாம்பவான்களுக்கு மகளாக நடித்த பெருமை இவரை சேரும்.

அது மட்டுமில்லாமல் தெலுங்கு சூப்பர் ஸ்டார், மலையாள சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துள்ளார். ஆனாலும் சொல்லும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாத்தால் எப்பவும் போல மற்ற நடிகைகளை போல இணையத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிரத் தொடங்கிய்யுள்ளார்.

இந்த நிலையில் பர்பிள் கலர் சுடிதாரில் கொஞ்சம் ஆள் பூசுனமாதிரி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் என்னமா நீ இப்படி ஆய்ட்ட என கமென்ட் செய்து வருகின்றனர்.

Published by
Rohini