Baby girl review: நிவின் பாலிக்கு கை கொடுத்ததா?- பேபி கேர்ள் விமர்சனம்

Published on: January 23, 2026
பேபி கேர்ள் விமர்சனம்
---Advertisement---

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேபி கேர்ள்.அருண் வர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் நிவின் பாலியுடன் ஜெய் பீம் புகழ் லிஜோ மோல், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் இருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை காணாமல் போவதும் அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை புலனாய்வு திரில்லராக உருவாகியுள்ளது இப்படம்.

சர்வம் மயா படத்தின் வெற்றிக்கு பிறகு நிவின் பாலி நடிக்கும் படம் என்பதால்,இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்பதே உண்மை. நிவின் தனக்கான வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இப்படம் சிறந்த கம்பேக் என்று கேரள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதேபோல், லிஜோ மோலின் நடிப்பும் அற்புதமாக உள்ளது. சாம் சி.எஸ்-ன் இசை த்ரில்லர் படத்திற்குத் தேவையான பதற்றத்தை அதிகரிக்கிறது.

படத்தின் முதல் பாதியில் அதாவது இடைவேளை வரை அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பில் செல்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தொய்வாகவே உள்ளது. ஆனாலும் குறைகளை தவிர்த்து பார்த்தால் இப்படம் திரில்லர் பட ரசிகர்களுக்கு செம ரீட்டாகவே உள்ளது.

கேரளாவை பொருத்தவரை இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று கேரள திரையுலகில் பேசப்படுகிறது.