இந்த வருசத்தோட மிகப்பெரிய உருட்டு இதுவாதான் இருக்கும்..! நிக்சன் நீங்களாம் திருந்த வாய்ப்பே இல்ல..!

by Akhilan |   ( Updated:2024-01-02 10:52:41  )
இந்த வருசத்தோட மிகப்பெரிய உருட்டு இதுவாதான் இருக்கும்..! நிக்சன் நீங்களாம் திருந்த வாய்ப்பே இல்ல..!
X

Biggboss Nixen: பிக்பாஸ் சீசன் 7ல் சமீபத்திய எலிமினேஷனில் நிக்ஸன் மற்றும் ரவீனா எலிமினேட் ஆனார்கள். இதில் நிக்ஸன் எப்போடா போவார் என பல வாரங்களாக ரசிகர்கள் காத்து இருந்ததால் இந்த அறிவிப்பு அவர்களுக்கு குஷியை தந்தது. ஆனா தலைவர் வெளில வந்து வேற லெவலில் ஒரு சம்பவம் செய்து இருக்கார்.

இந்த சீசன் பிக்பாஸும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியது. டாஸ்க் இல்லாததால் போட்டியாளர்கள் வாயாலையே வடை சுட்டனர். கிட்டத்தட்ட செலவே இல்லாமல் ஊர்வம்பு பேச வச்சே கண்டெண்ட் பிடித்தது கிரியேட்டிவ் டீம். அதில் நிறைய ட்ரோல் மெட்டிரியலானவர்களில் நிக்சனும் ஒருவர்.

இதையும் படிங்க: திமிரு ஈஸ்வரியாக நடித்த பிக்பாஸ் அர்ச்சனா! உண்மையான ஈஸ்வரியின் கமென்ட் என்ன தெரியுமா?

ஐஷு உடனான நெருக்கம். ஓவர் ரொமாண்ட்டிக் பேசிவிட்டு கடைசியில் பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற வைத்தார். அதிலும், ஐஷு சில வாரங்கள் முன்னரே வெளியேறி இருந்தார். அவர் சில நாட்கள் கழித்து பொது மன்னிப்பே கேட்கும் அளவுக்கு ஸ்டேட்டஸ் போட்டு எல்லாரிடமும் தப்பு செஞ்சி விட்டதாக மன்னிப்பு கேட்டார்.

அடுத்து நிக்சனை எப்போ தான் துரத்துவாங்க என காத்திருந்தவர்களுக்கு புது வருஷ ட்ரீட்டாக வெளியேற்றம் நடந்தது. அவர் வந்து சும்மா இருந்தாலே ரசிகர்கள் மறந்து இருப்பார்கள். சில நாட்கள் கூட முடியாத நிலையில் தலைவரின் இன்ஸ்டா பதிவு தான் மீண்டும் வெறியேற்றி விட்டு இருக்கிறது. அதில், இப்போ தான் எல்லாத்தையும் பாத்தேன்.

இதையும் படிங்க: இந்த பட்ஜெட்டுக்கு இப்படினா? 50கோடி கொடுத்தா தமிழில் ஒரு பாகுபாலியை காட்டிருவாங்க – சிவகார்த்திகேயன் பாராட்டிய படம்

வேலையில் காட்றேன் எனவும் குறிப்பிட்டார். மன்னிப்பு கேட்க வேணாம். அமைதியா இருப்பா என சிலர் கமெண்ட்டில் அறிவுரையை தட்டி இருக்கின்றனர். ஆனால் வழக்கம் போல ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசம் செஞ்ச, பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்த போன்ற கலாய்களுக்கு மத்தியில் ஒருசிலர் இந்த வருடத்தின் செம உருட்டு இதான் என்றும் கலாய்த்து வருகின்றனர். அதிலும் தன் பெயரில் இருக்கும் ஃபேன் பேஜை வேறு டேக் செய்து இருக்கிறார் என்பது கூடுதல் காமெடி.

Next Story