Bigboss Tamil: தமிழ் ரியாலிட்டி பிக்பாஸை பொருத்தவரை சில போட்டியாளர்கள் தான் 2 அல்லது 3 வாரத்திலேயே தங்களுடையை வெற்றியை உறுதி செய்து விடுவார்கள். இன்னும் சிலரோ கண்டிப்பாக பைனலிஸ்ட் வரை வருவார் என ரசிகர்கள் மனதில் பதிந்து விடுவார்கள்.
ஆனால் ஒரு சிலர் அந்த இடத்தினை பிடித்தும் கூட தப்பான விளையாட்டில் மொத்த ரூட்டையும் இழந்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவார்கள். அது ஓவியாவில் இருந்து தர்ஷன் வரை எல்லாருக்குமே பொருந்தும். அந்த லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறார் நிக்சன்.
இதையும் படிங்க: சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?
கடந்த சீசனில் ரேப் பாடகர் அசல் கோளாறு எண்ட்ரி கொடுத்து இருந்தார். ஆனால் அவர் விளையாடாமல் பெண் போட்டியாளர்களிடம் நெருக்கமாக பின்னி பிணைந்து கொண்டு இருக்க சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரை தொக்காக வெளியேற்றி பழி தீர்த்தனர் ரசிகர்கள்.
இதையடுத்து இந்த சீசனில் ரேப் பாடகராக உள்ளே நுழைந்தார் நிக்சன். அவர் ஒரு கட்டத்தில் ப்ரதீப்பையே எதுத்து நிற்க பிரச்னை பெரிதாகியது. நிக்சனுக்கும் ஆதரவு பெருகிறது. இதையடுத்து தான் அவருக்கும் சக போட்டியாளருமான ஆயிஷாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: பிரதீப்பை விட நிக்சன் தான் என்னை தப்பா பேசுனான்… அக்காவ இப்டியா பேசுவாங்க… வினுஷா சொல்லும் ஷாக்..!
இதையடுத்து இருவரும் கொஞ்சிக்கொண்டு கண்ணாடிக்கு இடையில் முத்தங்களை பறக்க விட்டும் வெறுப்பேற்றி கொண்டு இருந்தனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஐசுவிடம் எம்மா இருந்தா இருக்குனு சொல்லு எனக் கூற அப்போது தான் அம்மணிக்கே விஷயம் புரிந்ததாம்.
வெளியில் ஒரு காதலனை வைத்திருக்கேன். நிக்சன் அவனை மூணு மாதமா தானே தெரியுமுனு சொல்றான் என அம்மணி மணியிடம் வத்தி வைக்க ரசிகர்கள் ஆயிஷா மீது கொலைவெறியானார்கள். இந்த வாரம் அவரை வெளியேற்ற கட்டம் கட்டி வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் நிக்சன் இன்னமும் அடங்காமல் ஆயிஷாவை தொடுவதும், உரசுவதுமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அதிலும் இன்று அவருடன் குட்டி பெட்டில் படுத்து கொள்வதும், அவர் காலுக்கு இடையில் அமர்ந்து காலை தொட்டுக்கொண்டு இருப்பதும் வைரலாகி வருகிறது. ஜெய்கிற ஆசையில்லையோ!
நிக்சனின் லீலைகள்: https://twitter.com/vp_official__/status/1720030625208656058