“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது குக் வித் கோமாளி புகழை வைத்து “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தொடக்கத்தில் விளம்பர பட இயக்குனராக இருந்த ஜெ.சுரேஷ் மெல்ல மெல்ல வளர்ந்து திரைப்பட இயக்குனராக வளர்ந்தார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டவராக இருந்தார்.
இயக்குனர் ஜெ.சுரேஷ் தனது தாயார் கொடுத்த 600 ரூபாயை வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வந்தார். பல நாட்களாக சென்னையில் அலைந்து திரிந்தார் சுரேஷ். கையில் உள்ள காசும் கரைந்துக்கொண்டே வந்தது. இந்த நிலையில் ஒரு நாள் இரவு நேரத்தில் பனகல் பார்கில் உள்ள நல்லி சில்க்ஸ் கடையின் வாசலில் நடிகர் நிழல்கள் ரவி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாராம்.
அவர் அருகே சென்ற சுரேஷ் “சார் வணக்கம். நான் திருநெல்வேலியில இருந்து வரேன். எனக்கு சினிமாவுல நடிக்கனும்ன்னு ஆசை சார். யாரை போய் பார்க்குறதுன்னே தெரியல. எனக்கு எதாவது உதவி செய்ய முடியுமா?” என கேட்டிருக்கிறார்.
இதனை கேட்டதும் நிழல்கள் ரவி “சாப்பிட்டியா?” என கேட்டிருக்கிறார். உடனே சுரேஷ், “சாப்பிட்டேன்” சார் என்று பொய்யாக கூற, நிழல்கள் ரவி, தனது பர்சில் இருந்து நூறு ரூபாயை எடுத்துக்கொடுத்து “போய் சாப்பிடு” என்று கூறினாராம். அதன் பின் ஒரு பேப்பரில் தனது விளாசத்தை எழுதி “நாளைக்கு வந்து என்னை பார்” என கூறினாராம்.
அடுத்த நாள் சுரேஷ் காலை 8.30 மணிக்கே நிழல்கள் ரவியின் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கே நிழல்கள் ரவி சுரேஷை உட்காரவைத்து சாப்பாடு போட்டாராம். சுரேஷ் சாப்பிட்டதும் அவர் கையில் ஒரு சினிமா டைரியை கொடுத்தாராம் நிழல்கள் ரவி. “இந்த டைரியில் அனைத்து இயக்குனர்களின் விளாசமும் சினிமா கம்பெனிகளின் விளாசமும் இருக்கிறது. இதனை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடு. நீ நடிகனாகி விட்டால் என்னை வந்து பாரு” என கூறினாராம். அதன் பின் அந்த புக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்ததாம். இதனை பார்த்த சுரேஷ், நிழல்கள் ரவிக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டாராம்.
நயன்தாரா, விக்னேஷ்…
கங்குவா திரைப்படம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…
நயன்தாராவுக்கு பணத்தால்…
Dhanush: தற்போது…